செல்வம் அடைக்கலநாதன், அரினேந்திரன், பீ. செல்வராஜா, யோகேஷ்வரன் எனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலையில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ் விடுதலை அமைப்பின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இதுதொடர்பில் ஒரு குழுவினை நியமித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2004.10.19 ஆம் திகதி மட்டக்களப்பு, கல்வியகாடு பிரதேசத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, பின்னர் இவர்கள் நால்வரினதும் பாராளுமன்ற செயற்பாடுகளை இடைநிறுத்தி வைக்குமாறும் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)