![](http://3.bp.blogspot.com/-FOGJ-PR9NSg/U_StpdBF7aI/AAAAAAAAZMA/6CGgdCaPTS4/s320/Defence_Seminar%2B2014.jpg)
முன்னேறி வரும் நாட்டுக்கான சவால்கள் எனும் தொனிப்பொருளில், கொழும்பில் நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டின் இறுதி தினம் இன்றாகும். சுமார் 55 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும் இம்மாநாட்டை, பாதுகாப்பு அமைச்சு 4வது தடவையாக ஏற்பாடு செய்திருந்தது.
இன்று முற்பகல் இம்மாநாட்டில் உரையாற்றிய சீனாவின் தந்திரோபாய மற்றும் சர்வதேச தொடர்புகள் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் கலாநிதி திருமதி. வேங் வே உவா, இலங்கை பொருளாதார சமூக அரசியல் கலாசார துறையின் முன்னேற்றத் திற்கு தேவையான உதவிகளை வழங்க, சீனா தயாராகவிருப்பதாகவும், இரு தரப்பு உறவுகளை கட்டியெழுப்புவதற்கு, தமது நிறுவனம் தேவையான பஙகளிப்பை வழங்குமென்றும், தெரிவித்தார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூரும் தமக்கு ஏற்பட்ட சவால்களை வெற்றிகொண்ட விதம் தொடர்பாக, அந்நாட்டு பிரதிநிதிகள் இங்கு உரையாற்றினர்.