குருநாகல் பஸார் வாலிப சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதங்களை நிந்திக்காதே, பிரான்ஸ் நாட்டுப் பொருட்களைத் தடை செய், ஊடகசுதந்திரத்தை இழிவு படுத்தாதே, அல்லாஹ். நபி (ஸல்) அவர்களை இழிபடுத்துபவர்களை நாசம் பண்ணிவிடு போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி கோசமெழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவத்தகம பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சித் தலைவர் முஹமட் ரிபாழ், நசார் ஹாஜியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு இது தொடர்பாக மகஜர் கையளிக்கவுள்ளதாகவும் பிரான்ஸ் கொடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இக்பால் அலி