Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே! நோர்வே நக்கீரா

$
0
0
தமிழ்த்தேசியத்தின் சின்னமாகவும், ஒன்றைக்குரலாகவும், ஆணிவேராகவும், ஆதிசக்தியாகவும் வாழ்ந்த மங்கையர்க்கு அரசியாக அன்றே இயற்பெயர் கொண்டு மங்கையற்கு அரசியாகவே வாழ்ந்த தேசியத்தின் குரல் அடங்கி 31நாட்கள் ஆகின்றது. 8.04.2016 அவருடைய அந்தியேட்டி கிரியை முன்னிட்டே இக்கட்டுரை எழுதப்படுகிறது.

30வருடங்களுக்குள் தமிழ்த்தேசியத்தைக் கட்டி எழுப்பிய ஒற்றைப்பெண்மணியை முக்கியமாக தமிழினம்எப்படி மறந்தது. நன்றி கெட்ட சமூகத்தில் ஒருவனாகவே நின்று கொண்டு இதை எழுதுகிறேன். இதன் விளைவுதானா முள்ளிவாய்கால்? இன்னும் எத்தனை முள்ளிவாய்கால்கள் வந்தபின்னர் நன்றியுள்ளவர்களாக மாறுவீர்கள் 500வருடங்களுக்கு மேல் அடிமையுணர்வேறி அமிழ்ந்து கிடந்த தமிழினத்தை, தமிழ் பெண்ணினத்தை மங்கையற்கரசியெனும் ஒற்றைப் பெண் முன்னணியில் நின்று தட்டி எழுப்பினார்கள். திருமதி மங்கையற்கரசியின் இறப்பை பலதமிழ் ஊடகங்கள் பேசவே இல்லை. சில தமிழ் ஊடகங்களைத் தவிர மற்றையவை இதை வெறும் செய்திபோல் சொல்லிச்சென்றன. இவரது இறுதியாத்திரையில் பலநாடுகளில் இருந்து பிரமுகர்களும், 1500 மேற்பட்ட மனிதர்களும் சமூகமழித்திருந்தும் இவரின் இறுதி ஊர்வலம் ஊடகங்களால் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது வெட்கத்துக்கும் வேதனைக்கும், அவமானத்துக்கும் உரியதே. அன்னை கூட்டணிமேடைகளில் கூறிய வசனம்

"ஓடையிலே என்சாமல் ஓடும் போதும் ஒண்டமிழே சலசலத்து ஓடவேண்டும்
பாடையிலே ஊரைச்சுற்றிப் பவனிவரும் பொழுதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க
வேண்டும்"


அவரது ஆசையை நிறைவேற்றினோமா? தமிழ்கேட்டுச் சாக நினைத்து அந்த ஆத்மாவை ஊட்டிய கைகளை வெட்டி, அன்னியதேசம் அனுப்பி, நாடற்ற, நாமற்ற, நாதியற்ற அனாதைப்பிணமாகவே அனுப்பி வைத்தோம். தவறுவிடாத மனிதனும் இல்லை அரசியலும் இல்லை. ஆனாலும் அதற்கு அவருக்குக்காலம் கொடுத்த தண்டனை மிகப்பெரிது. அதைவிட நன்றி கெட்டசமுதாயமாக நாம் நின்றது அதைவிடக் கொடியது.
இவர் அமிர்தலிங்கத்தைத் திருமணம் செய்ததால் மட்டும் அரசியலுக்கு வந்தவர் அல்ல. தமிழரசுக்கட்சியின் கூட்டங்களிலேயே சிறுவயதில் தன் கணீர் என்ற குரலால் எழுற்சிப்பாடல்களைப் பாடி செத்துக்கிடந்த தமிழ்ச்சமூகத்தை தட்டியெழுப்பியவர். இதற்காகவாவது இவரின் இறுதிச்சடங்கில் ஊடகங்களின் காணொளிக்கண்கள் திறந்திருக்கலாமல்லவா? மறுத்திருக்கவே கூடாது. அவரின் தேவைக்கு தமிழர்கள் கொடுத்த பரிசு என்ன? ஆம் அன்னியநாட்டில் அனாதைப் பிணம்??? தன்னுடைய ஈமைக்கிரியைகள் தன்மண்ணில் நடைபெறவேண்டும் என்பதே அவரின் இறுதிகால ஆசையாக இருந்தது என்பதை அறிந்தேன். நடந்ததா...? நன்றி கெட்ட சமூகமே திருப்பிப்பார். நாளை உனக்கும் உன்தேசியத்துக்கும் இப்படி நடக்கலாம்.

பெண்கள் வாசலுக்கு வரமுடியாத காலத்தில் கூட மேடையேறி எழுச்சிப்பாடல்கள் பாடி தமிழர்களைப் புரட்சியடையச் செய்த பெண்மணி எம்மணி அவர்கள். கொண்டானேமா? கேவலப்படுத்தாது இருந்தோமா? நாவில் ஒன்றும் நெஞ்சில் ஒன்றும் கொண்டு திரியும் சமூகமே! சாதியில்லை என்று பேசியவர்களின் வீடுகளில் சாதியிருந்தது. இவர்களின் வீட்டில் யாரும் போய்வரலாம். சாதியில்லை என்பதைச் சாதித்துக் காட்டியவர்கள் இவர்கள். சொல்வதைச் செயலாகவும் செயலையே வாழ்வாகவும் கொண்டவர்கள் அமிர்தலிங்கம் தம்பதியினர். ஊட்டிய கைகளே தீட்டியன கத்தியை. வளர்த்துகடாக்களே மார்ப்பில் பாய்ந்தாலும், தன் பூவும் பொட்டும் அழிந்தாலும் அவரின் ஊட்டிய கைகள் எதிர்த்து ஓங்கவில்லை. இதையாவது புரிந்து கொள்வீர்களா? அன்னமிட்ட அன்னையை தேசியத்தின் அடிநாதத்தை ஒழித்தீர்களே அழித்தீர்களே.

பாதுகாப்பாக இருந்து கொண்டு பெண்விடுதலை பேசப்படுகிறது. ஆனால் பாதுபாப்பற்ற சூழலில் கூட வீரப்பெண்ணாக வீறுநடைபோட்ட மங்கையற்கரசி அம்மாவின் இடத்தை நிரப்ப இன்னும் ஒருவர் வரவில்லை. வரப்போவதும் இல்லை. பாதுகாப்பான நாடுகளில் இருந்த பக்கம் பக்கமாக எழுதலாம். அம்மாவுக்கு இணையாக இன்மொரு சகாப்தம் இன்னும் பிறக்கவே இயலாது. பிறக்கப் போவதும் இல்லை.

ஆரம்பகாலத்தில் ஆயுதப்போராட்டத்தின் காரண கர்த்தாக்கள் அனைவருமே அன்னையின் கைகளால் அன்னமுண்டவர்கள். உண்ட தட்டில் ......களே! அவரை விதவையாக்க எப்படி முடிந்தது? இருந்தும் தாய் தாய்மையுடன எதிர்த்து ஒரு சொல் இயப்பவே இல்லை. வேதனையுடன் வழிவிட்டு விலகிக் கொண்டார். தட்டிவளர்த்துபிள்ளையைத் தட்டிக் கொட்டுவதா என்று நினைத்தாரோ என்னவோ? எதிரிகள் துரோகிகள் கூடக் கண்கலங்கி நின்றபோது கூட எமது கமாரக்கண்கள் திறக்கவே வில்லையே.

அன்றும் இன்றும் தமிழீழம் என்ற சொல்லை உலகெங்கும் உச்சரிப்பதற்கு அடிநாதமாக இருந்தவர்கள் திரு திருமதி அமிர்தலிங்கம் என்பதை யாரும் மறுக்க இயலாது. தமிழ்தேசியத்தின் சின்னங்களாகவும் அதன் வாரிசுகளாகவும் தம்மை காட்டிக்கொள்ளும் பொய் முகங்களே! உங்கள் முகங்களை எங்கே கொண்டு போய் புதைக்கப்போகிறீர்கள். திரு அமிர்தலிங்கத்தைப் போல் ஒரு அறிவாளியையும், தீட்சணியரும், திறமைசாலியும், மங்கை அம்மாவை போன்ற பெண்விடுதலைப் போராளியையும் இனித்தமிழினம் சந்திக்காது. இதுதான் சாபமோ என்னவோ?

தமது இயக்கதில் இறந்த அனைவருக்கும் உலகெங்கும் ஒளியேற்றுவித்த பெருமகன் பிரபாரகனுக்கே ஒரு மெழுகுதிரி ஏற்ற வக்கற்ற, மனமற்ற, வக்கிரகம் கொண்ட வெட்கம் கெட்ட சமூகமே நீ தேசியத்தின் குரலான மங்கையற்கரசிக்கா தீபம் மேற்றப்போகிறீர்கள். தேசியத்தலைவன் என்று கொண்டாடியவருக்கே இது தேசியம் இல்லை வேசியம் என்பதைக் காட்டி தேசியப்போர்வைக்குள் கொள்ளையடித்து, தமிழர்களை ஏமாற்றி, தேசியத்தை விற்று வயிறு வளர்த்து சுகபோகங்களை அனுபவிக்கும் வீணர்களே மறக்காதீர்கள் தீட்டியவாள் கூட நீட்டியவனை வெட்டிப்பார்க்கும் மறந்து விடாதீர்கள்.

தாய், தந்தை, மகன் ஒருகுடும்பமே ஒரேநேரத்தில் சிறைவாசம் அனுபவித்தது திரு திருமதி அமிர்தலிங்கத்தின் குடும்பம் ஒன்றுதான். இது கூட நினைவிருக்கிறதா நன்றி கெட்டசமூகமே. ஆயுதப்போராட்டத்துக்கு எதிராக இவர்கள் என்றும் இருந்ததில்லை. மாறாக உதவியாகவே இருந்தார்கள். பல வளக்குகளை இலவசமாகவே நடத்தியவர் திரு அமிர்தலிங்கள் அவர்கள். தமிழினத்தைக் களமாடவைத்த கோமனை கொன்று நன்றி கெட்டு சமூகத்தின் வாரிசுகளாக நின்று முள்ளிவாய்காலில் தன்னையே கவிட்துக் கொட்டி பின்னருமா நன்றிக்கு அர்த்தம் புரியவில்லை.

தன்கணவர் வஞ்சமாக நன்றிகெட்ட தனமாகக் கொல்லப்பட்ட பின்னரும் அரசியலில் தலைப்பதவியை ஏற்று எதிராளிக்கு எதிராக நடந்திருக்கலாம். அம்மா அதைச் செய்யவில்லை. அதுவும் தன்பிள்ளை என்று நினைத்தாரோ என்னவோ? மறைமுகமாக அத்தனை போராளிக்குழுக்களுக்கும் நிறைமுகத்துடன் உதவிய இவர்களை எதிர்த்து, நிமிர்ந்து பேசுவதற்கு திராணியும் உரிமையும் எப்படி வந்தது. யார் தந்தது? மறந்து போன, இறந்து போன என்சமூகத்துக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். தமிழீழம் என்பது வட்டுக்கோட்டை தொகுதி பண்ணாகத்தில் கூட்டணியே "தமிழீழப்பிரகடனம்"செய்தது. மக்களும் கூட்டணிக்கே தமது வாக்குகளை இட்டு திரு அமிர்தலிங்கத்தை அதுவும் சிறுபான்மை இனத்தில் இருந்து தூக்கி எதிர்கட்சித்தலைவர் ஆக்கினார்கள் என்பதை அறிக. இது கூட்டணிக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரம். இதை வேற்றமைப்புகளுக்கு அல்ல என்பதையும் அறிவது அவசியம். இத்தமிழீழம் என்பதை தன்நெஞ்சிலும் தோழிலும் சுமந்து வந்த முன்னோடிகளில் முதன்மைப் பெண் திரு மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என்பதை மறுத்து விரல் காட்டி விமர்சிக்கக் கூட யாருக்கும் தகுதி, உரிமை, அதிகாரம் கிடையாது.

தமிழ்தேசிய இனத்தின் தாயை அனாதைப்பிணமாக அனுப்பிவிட்டு தம்மைத் தேசியத்தின் ஊடகம் என்று காட்டிக் கொள்ளும் போலிமுகங்கள் இன்றும் தேசியம் பேசுகின்றன. இதைதான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதா? தமிழ்தேசியத்தை தேசம் தேசமாய் பேசிவிற்று இன்றும் தம்மைத் தேசியவாதிகளாக முகம்காட்டும் உலகில் இவர்களின் கண்கள் அம்மையாரின் பிணத்தில் கூட படாமல் போனதே தமிழ்த்தேசியம் என்றாவது மிளிரும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

தமிழ்தேசியத்தின் ஒற்றைச்சின்னமான பெண்மணி, தேசியத்தின் உயிர்நாதம், ஈடுகொடுக்க முடியாத அகல் மங்கை அம்மா என்று கூறி அவரின் அந்தியேட்டி தினத்தில் கண்ணீர் மலர்கொண்டு அவரின் ஆத்மசாந்திக்காக ஆராதிக்கிறோம்.




Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>