Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

எல்லாளன் யார் ? டக்களசிடம் கேட்கின்றார் சகாதேவன்.

$
0
0
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தாங்கள் தெரிவித்த ஒரு கருத்து தொடர்பாக பரபரப்பாக பேசப்படுகிறது.............

அதாவது யுத்தத்தால் இறந்த சகலரையும் நினைவு கூறுவதற்கு பொதுவான நாள் ஒன்றும் , நினைவு கூறுவதற்க பொதுவான தினம் ஒன்றும் ஏற்படுத்த வேண்டும் என்றும் , இதற்கான தனிநபர் பிரேரணணை ஒன்றை தாங்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வில் கொண்டுவர போவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

அவ்விடத்தில் தொடர்ந்து தாங்கள் கருத்து தெரிவிக்கும் போது எல்லாளன் துட்டகைமுனு , உதாரணத்தையும் குறிப்பிட்டிருந்தீர்கள்...

மேலும் தாங்கள் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது "எல்லாளன் யார் என்றும் துட்டகைமுனு யார் என்றும்"நேரடியாக பதிலளிக்காவிட்டாலும் அதை ஊகப்படுத்தியே பரபரப்பாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தாங்கள் கையாளும் இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது.

இறந்தவர்களை நினைவு கூறுவதற்றகு மேற்கொள்ளும் சகல விடயங்களும் வரவேற்கத்தக்கது இதில் எந்த தடையும் வரக்கூடாது.

ஆனால் தாங்கள் குறிப்பிட்ட "எல்லாளன் துட்டகைமுனு "உதாரணம் "இரு புறமும் கருக்குள்ள பட்டயம் "போன்றதாகும் இல்லை, அதனையும் விட பயங்கரமானது .

ஏனென்றால் தமிழ் மக்களில் 90% ஆனவர்கள் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இன்னும் நம்புவதில்லை இனியும் நம்பப்போவதில்லை , பிரபாகரனுக்கு கௌரவம் வழங்க சிங்கள மக்களும் , சிங்கள அரசியல் தலைவர்களும் வரலாற்றில் எப்போதும் இடங்கொடுக்கப்போவதில்லை

இடையில் தமிழ் தேசிய அரசியலை தமது சுய இலாபத்துக்காக மட்டுமே செய்து கொண்டிருக்கும் "அலி அரசியல்வாதிகள் "பலர் இருக்கிறார்கள் . இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

இவர்களுக்கு பிரபாகரனின் பெயர் "ஊறுகாய் "மாதிரி அதிகம் உணவில் சேர்க்காதது ஊறுகாய் .

ஆனால் குடிகாரர்கள் போதை ஏற ஏற சுவைக்காக தானும் நக்கி.... நக்கி அருகிலுள்ளவனின் போதைக்கும் எவ்வாறு பரிமாறுவானோ , அதுபோலவே எமது சில தமிழ் தேசிய அரசியல்வாதிகள் .
தேர்தல் அரசியல் காலங்களில் பிரபாகரனின் பெயரை ஊறுகாயாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு தேர்தலில் தாங்கள் வெல்ல மட்டுமே பிரபாகரன் தேவை.

இவர்களை போய்க் கேட்டால்.????????????????????????????????

ஒரு படத்தில் , என்னாத்தை கன்னையா விடம் ஒருவர் போய்க் கேட்பார் "வண்டி வருமா "என்று அதற்கு அவர் "வண்டி வரும்ம்......................... ஆனா.... வராது.........? "என்று பதில் சொல்லுவார்..

அதுபோல தான் எமது தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் .

உங்கள் முயற்சிக்கு எளிதாக வெற்றி கிடைக்கும் என்றால், உங்களை அதிஸ்டசாலி என்பேன்.

தமிழ் மக்களின் மிக நீண்டகால மன உளைச்சலுக்கும் மருந்து தடவியது போல இருக்கும்.

இறுதியாக ஒரு வேண்டுதல். அவ்வாறு ஒரு சிலைவைத்து அவர்களுக்கு பூ போட்டு பூசை செய்யும் வாய்ப்பு கிட்டினால், உங்களோட இருந்து புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்ற ஐயர் தொடக்கம் அனைவரது குடும்பங்களையும் ஒரு வண்டியில் அழைத்துக் கொண்டு போய் வருடா வருடம் வரிசையில நின்று பூப்போட்டு தவறாக கும்பிட வையுங்கள்.. ஏனென்றால் அவர்களின் உயிர் பலி கொடுக்கப்பட்டிருக்கா விட்டால் உங்கட முகத்திரை கிழிந்திருக்குமல்லோ.




Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>