Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

யூலியான் அசெங்கே விடுதலை. வ.அழகலிங்கம்.

$
0
0
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓர் ஒப்புவமையற்ற வெற்றி. உலக ஏகாதிபத்தியத்தையும் உலக முதலாளித்தவத்தையும் எதிர்த்துப் போராடிய மார்க்ஸ், ஏங்கல்ஸ் லெனின், ரொக்ஸ்சி .. போன்றோரின் வரிசையில் ஒப்பாரும் மிக்காருமில்லாமல் ஒளிருகிறார் யூலியான் அசெங்கே. உலகத்தில் நீதி கோலோச்ச வேண்டுமென்பதற்காகத் தமது உல்லாச வாழ்க்கையைத் துறந்தவர்களின் அமைப்புத்தான் விக்கி லீக்.

மேற்குலக ஜனநாயகத்தின் கீதம் இதுதான்.

கொல்லும் தொழிலே தெய்வம்
பொய்மைதான் நமது செல்வம்
குண்டும் சூடும்தான் எமக்கு உதவி
ஏழை கண்ணீர்தான் எமது குளியல்

இன்று 19.05.2017 ஜூலியன் அசாங்கேயின் பாலியற் பலாத்கார விசாரணை கைவிடப்பட்டது. அசாஞ்சிற்கு எதிரான பாலியற்பலாத்காரக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை வேகமாக முன்னோக்கி நகர்த்த முடியவில்லை என்ற காரணத்தைக் காட்டிக் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நடாத்தினால குற்றஞ்சாட்டிய சுவீடனின் வழக்குத்தொடுனருக்கு ஒரு கூடாத பேரை உருவாக்கும் என்ற காரணத்தால் சுவீடிஷ் நீதித்ததுறையே இவ்வழக்கை விடச் செய்தது.

ஆலைப் பலாவாக்கலாமோ -அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாமோ
நீலநிறக் காக்கை தனைப் பேசுவிக்கலாமோ
கருணையில்லா மூர்க்கரைச் சீராக்கலாமோ

இரும்பை பொன்னாக மாற்ற முனைந்த ரசவாதம் தோற்றது.
இரும்பைத் தின்ற எலியின் கதை ஏளனப்படுத்தப் பட்டது.
பிள்ளையைப் பருந்து தூக்கிக்கொண்டு போன பாலபாடம் முடிவுற்றது.
ஈற்றில் செத்தவர்களைச் செத்தவர்களே புதைக்கும்படி விடப்பட்டது.
அமெரிக்க ஏகாதிபத்தியச் செத்தபிணத்தருகே இனிச் சாம்பிணங்களான ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் மொய்துக்கிடந்த நாட்கள் மலையேறி விட்டன.

அசங்கே விசாரணை சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணையைக் கையாண்டதால் சுவீடனின் சட்ட முறைக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லையென்று சுவீடிஸ் அரசு முடிவுக்கு வந்தது.

பிரித்தானிய இன்றய தேர்தலிலே இது ஒரு பேசுபொருளாகியது. இது முதலாளித்துவ நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைச் சேவையானது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்மையே திரண்டதென்ற எதிர்மறைப் படத்தை உருவாக்கியது.

அசாங்கே 2012 ல் எக்குவடோர் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்ததில் இருந்து இன்றுவரை அங்கு வாழ்கின்றார். ஐரோப்பிய ஒன்றியமே யூலியான் அசெங்கேயின் கைது ஆணையைப் பிறப்பித்தது. ஐரோப்பிய ஆநாகரீகத்தை அதன் மூலம் அம்பலப் படுத்தியது.

ஐரோப்பியரின் முதலைக் கண்ணீரையும் தொழிலாளர் பிரபுத்துவப் பிரதிநிதிகளின் பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தையும் நாளாந்தம் மத்தித்தரைக் கடலில் மிதக்கும் சிரிய, ஈறாக்கிய, லிபிய ஆபுகானிஸ்தான் குழந்தைகளின் சடலங்கள் சாட்சி கூறுகின்றன.

அவர் எந்தவொரு பாலியல் குற்றத்தையும்; ஒருபோதும் செய்யவில்லை என்பது எல்லோரும் அறிவர்.

அசாஞ்ச் ஏற்படுத்திய அமைப்பான விக்கிலீக்ஸ் 'போர், வேவுபார்த்தல் மற்றும் ஊழல் சம்பந்தப்பட்ட தணிக்கை அல்லது தடைசெய்யப்பட்ட உத்தியோகபூர்வ பெரிய தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்டது. 2016 அமெரிக்கத் தேர்தலின்போது ஜனநாகக் கட்சி பேர்ணி சண்டரைத் தோற்கடிப்பதற்காக நாற்பதினாயிரம் கணணி ஆவணங்களை ஜனநாயக் கட்சியின் காரியலயத்திலிருந்து வெளியிட்ட ,,சேத் றிச்'என்பவர் மறுநாள் அதிகாலை கொலைசெய்யப் பட்ட மர்மத்தை வெளியிட்டது. அசெங்கே இந்த யுகத்தின் மாவீரன். விக்கிலீக் தொடர்ந்து வாழ்ந்தால் உலகத்திற்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

உண்மையிலே இப்பொழுது ஓர் உலகப் புரட்சிக்கு முந்திய சர்வதேச நிலமைகள் நிலவுகின்றன.

2008 வங்கி நெரக்கடியிலிருந்து முதலாளித்துவ உலகம் இன்னும் மீண்டதற்கான எந்த அறிகுறியும் தெரியவிலலை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளுங் கட்சிகளான ஜனநாக்கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையேயுள்ள குடம்பிச் சண்டை தீர்ந்த பாடில்லை. ஆளும் வர்க்கங்கள் சமரசமற்று முரண் பட்டு விட்டன. அமெரிக்க அரசு பழைய வழிகளில் தொழிலாளாகளை ஆளமுடியாத நிலையில் உள்ளது. தொழிலாளர்களும் பழைய வழியிலான ஆளுகையை ஏற்கவில்லை. உலகமயமான பொருளாதார அமைப்பு முறையை ஒழுங்கமைப்பதற்கேற்ற ஓர் உலகப் பேரரசர் உருவாகவில்லை. ரம்பின் அமெரிக்கா முதலும் முன்னியும் பிரித்தானிய ஐரோப்பியர்களோடேயே சேர்ந்து வாழ லாயக் கற்றதாகி விட்டது. தமிழ் நாட்டில் அரசியல் நாறிமணக்கிறது. வெட்கப்படத்தெரியாத மக்கள் வாழும் தொழுவமாகிவிட்டது. இலங்கையில் இம்முறை மே தினம் ஒரு ஹர்தாலிலிலும் பெரியதாகவும் ஒரு புரட்சியிலும் சிறியதாகவும் அமைந்தது. இவை என்னத்தைக் கட்டியம் கூறுகின்றன?


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>