Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நீதிமன்றை அவமதித்த நீதியரசர்! ஏறுகின்றார் நாளை குற்றவாளிக்கூண்டில்.

$
0
0
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்த குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்தார்.

குறித்த குழுவானது வட மாகாண அமைச்சர்களில் சிலரை மோசடிக்காரர்களென இனம்கண்டதுடன் அவர்களை பதவி நீக்கம் செய்யுமாறும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் குற்றஞ்சாட்டப்படாத அமைச்சர்கள் சிலரும் விக்கினேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

விக்கினேஸ்வரன் குற்றமற்ரோரை பதவி நீக்கம் செய்தமை சட்டத்திற்கு முரணானது என மாகாண அமைச்சர்களில் ஒருவரான டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தார். டெனீஸ்வரன் வழக்கை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்று அவர் தொடர்ந்து அமைச்சராக செயற்படலாம் என தீர்ப்பளித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

குறித்த நீதிமன்ற தீர்ப்பினை செயற்படுத்தாது தட்டிக்கழித்துவந்தார் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன். அத்துடன் காலத்தை கடத்தும் நோக்கில் அத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடும் செய்திருந்தார். இந்நிலையில் டெனீஸ்வரன் நீதிமன்ற திர்ப்பை முன்னாள் நீதியரசர் நிறைவேற்ற தவறியதன் ஊடாக நீதிமன்றை அவமதித்துள்ளார் என வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றை அவமதித்தமை தொடர்பில் நாளை குற்றவாளிக்கூண்டில் ஏறுகின்றார் முன்னாள் நீதியரசர் விக்கினேசுவரன். விக்கினேசுவரனுடன் சேர்த்து இரு மாகாண அமைச்சர்களான பவான் எனப்படுகின்ற சிவநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கும் நீதிமன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினமிரவு அனந்தி சசிதரனுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாம் என அவர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டமை நீதிமன்றை ஏமாற்றுவதற்காகவே என இலங்கைநெட் சந்தேகிக்கின்றது.

நேற்று விக்கினேசுவரனின் மூஞ்சையில் குற்றிய மேன்முறையீட்டு நீதிமன்று.

விக்கினேசுவரனால் குறித்த தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமது தரப்பு நியாயங்களை முன்வைக்காத விக்கினேசுவரனின் வக்கீல்கள் , தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமையால் தீர்ப்பை நிறைவேற்றாது நீதிமன்றை அவமதித்தார் முன்னாள் நீதியரசர் என தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு மனத்தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கமே மாகாண சபையின் காலம்முடியும் வரை தீர்ப்பை நிறைவேற்றாது கடத்துவதாகவே இருக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்கக்கூடிய நீதிபதிகள் „நீதிமன்றை அவமதித்த வழக்கை இடைநிறுத்த முடியாது'என தீர்ப்பளித்துள்ளனர்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>