![](http://4.bp.blogspot.com/-zvoygWPisz8/W5jqk0WhBsI/AAAAAAAArvo/VfRM4p8ddh0Lc9Ysq8oIeTOBkfvntrR2gCLcBGAs/s200/drump.jpg)
போதை பொருட்கள் கடத்தும் ஆசிய நாடுகளில் பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் முக்கிய நாடுகளாக அடையாளம்காணப்பட்டுள்ளன.
பகாமஸ், பெலிஸ், போல்வியா, கொலம்பியா, கோஸ்டா ரைகா, ஈக்வேடார், எல் சால்வேடார், கவுட்டமாலா, ஹைதி, ஹோண்டுரஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, பனாமா, பெரு, நிகராகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளும் போதை பொருட்களை சட்டவிரோதமாக கடத்து நாடுகளின் பட்டியலில் இடப்பெற்றுள்ளன.
கொலம்பியா, மெக்சிகோ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
மேலும், மெக்சிகோவிலிருந்து வரும் ஹெராயின் மற்றும் கொலம்பியாவிலிருந்து வரும் கோகைன் மூலமும் அமெரிக்காவில் ஆண்டுத்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி போகின்றன.
அமெரிக்கா தொடர்ந்து சர்வதேச அளவில் போதைப் பொருட் உற்பத்தி மற்றும் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.