![](http://1.bp.blogspot.com/-4eShQSt3iAI/W8obVcl7zmI/AAAAAAAAseY/gyRDichAdbs0lTfuV7ihMs0Fkolj4M2twCLcBGAs/s200/students%2Bkilled%2Bin%2Brussia1.jpg)
இதுகுறித்து விசாரணைக் குழு அதிகாரிகள் தரப்பில், "கெர்ச் நகரில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் 18 வயதான மாணவர் ஒருவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதில் அவருடன் பயின்ற சக மாணவர்கள் 19 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார்.
இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். மாணவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்” என்றுகூறியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் அந்த மாணவர் கேன்டீனில் குண்டு வீசியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
![](http://1.bp.blogspot.com/-4eShQSt3iAI/W8obVcl7zmI/AAAAAAAAseY/gyRDichAdbs0lTfuV7ihMs0Fkolj4M2twCLcBGAs/s640/students%2Bkilled%2Bin%2Brussia1.jpg)
![](http://1.bp.blogspot.com/-wyEiQ-9Z-co/W8obVUqjNGI/AAAAAAAAsec/nbmCPKDCjZwdq_8Zhzo7kpF-GuHb2GcfgCLcBGAs/s1600/students%2Bkilled%2Bin%2Brussia.png)