![](http://3.bp.blogspot.com/-d5z8i8C7rvI/W8sznSrDusI/AAAAAAAAsgA/kmkXkzbThJE2cfpOCuZ0xDXR9mZhf7d3QCLcBGAs/s200/sujeeva%2Bsenasinge.jpg)
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம்கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தேன்.
சரியாக இரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் அவர் எச்சரித்தார். 40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.