![](http://4.bp.blogspot.com/-GwbzNetaMWI/W-VarknbSXI/AAAAAAAAs5U/B_7NbbztyUYExe_GqTW_mWgFTatEtoOYACLcBGAs/s200/Europian%2BUnion.jpg)
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகள், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்கள் இணைந்து கூட்டு அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையை நீக்குவதற்ககாக உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும், உடனே பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தாமதிக்குமானால் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கின்ற நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், முதலீட்டாளர்கள் இலங்கையை நாடுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.