![](http://2.bp.blogspot.com/-inaRTayJ3J4/W-1G3TeYfYI/AAAAAAAAtDA/9v43X1722JMIgL49XNmdYkboUrje9HHqQCLcBGAs/s200/Kumara%2BWelgama.jpg)
புதிய பிரதமர் கட்சியின் உறுபினர்களை ஒன்றினைத்து நாட்டின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட பாராளுமன்ற அமைச்சர் குமார வெல்கம, தனது பலத்த எதிர்ப்பை அங்கு வெளிக்காட்டியுள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் :
இன்று நடந்தது என்ன? புதிய அரசாங்கமும் தோற்று போனது. இத்தனை நாள் நாம் கட்டிக் காத்த எம் கட்சியின் கீர்த்தியும் வீழ்ச்சியடைந்தது. நாம் அனைவரும் எதிரிகளின் சதிவலையில் மாட்டிக் கொண்டோம்.
மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடன் மற்றவர்களையும் மாட்டச்செய்துவிட்டார் என தனது ஆதங்கத்தையும் பலத்த எதிர்பையும் வசைபாடிக் கொண்டே தெரிவித்துள்ளார்.