![](http://3.bp.blogspot.com/-IkOiJZm6dPE/W_mpzUlvZUI/AAAAAAAAtRk/aNC5Eh_WH0kqgYqlpOKIEMokM7lUNsWYwCLcBGAs/s200/Maithripala%2BSirisena.jpg)
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில்(23) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில் :
எனது அரசியல் பயணத்தின் போது நான் பல தடைகளை கடந்தே இன்று இந்நிலையில் உள்ளேன்.
ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளேன். பாராளுமன்றத்தில் இல்லாத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியுள்ளள்ளனர். எனது மகள் எழுதிய 'ஜனாதிபதி தாத்தா'எனும் நூல் பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியுள்ளனர்.
2015 ஜனவரி 08ஆம் திகதி பொது ஆபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வந்து தான் மேற்கொண்டது அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று நாட்டுக்கு வேண்டாத அனைத்து சக்திகளையும் நீக்கி முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டமும் அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் எனக் குறிப்பிட்டார்.
இன்று தன்னை பிழையாக காணும் அனைவரும் நாளை தன்னை சரியான ஒரு தலைவர் என புரிந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் தன்னை கொலை செய்யும் சதி முயற்சி சம்பந்தமான பல தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டின் அநீதி லஞ்சம் ஊழல் அதிகார துஸ்பியோகம் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதனை தான் ஒரு போதும் நிறுத்தபோவதில்லை. இம் முயற்சியின் போது தனது பதவி அல்லது தனது உயிர் இரண்டில் ஒன்று மட்டுமே இழக்க நேரிடும். ஆனால் இச் சவால்களைக் கண்டு பின் வாங்க போவதில்லை.