![](http://3.bp.blogspot.com/-YkEuZQr1mn0/XAVk1jU96HI/AAAAAAAAtbw/1hN8KCV65NkoZPwz3IdTYzRMaVpOyTsngCLcBGAs/s200/Laxman%2BKiriellan.png)
பேச்சுவார்த்தை முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து லக்ஸ்மன் கிரியல்ல, நாம் எமது முன்னணியின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க அவர்களை நியமிக்குமாறு வேண்டினோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். பிரதமராக பெரும்பாண்மையானோர் யாரை விரும்புகின்றார்களே அவரையே ஜனாதிபதியால் நியமிக்க முடியும். ஜனாதிபதி விரும்புகின்றவரை அல்ல என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல் மிகக்குறுகியே நேரத்திலேயே நிறைவு பெற்றுள்ளமை அவதானிக்க முடிந்துள்ளது.
அதேநேரம் இன்றைய சந்திப்பு வெற்றியளிக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை சந்திக்கப்போவதில்லை என முன்னணி தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.