![](http://2.bp.blogspot.com/-yqtt5q8QbWs/XAvbJ2nlpxI/AAAAAAAAtnQ/-rBowtgMo1MwF6qatAA75minHZCNPcIHwCLcBGAs/s200/Police%2Bsargent%2Bin%2Bcourt.jpg)
இத்தண்டனையை குறித்த காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதிவாதியின் பிள்ளை க.பெ.சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளதால்அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக பரீசீலனை செய்யுமாறு சட்டத்தரணியால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும் குறித்த அதிகாரியின் குற்றம் தொடர்பில் பரீசீலனை செய்யக் கூடியதல்ல என நீதிபதி கூறியுள்ளார்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக குணவர்தன என்னும் நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தண்டப்பணமாக 2500ரூபா பெற்றுக்கொண்ட போக்குவரத்து அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டில் லஞ்சம் ஊழல் அதிகார சபையின் அதிகாரிகள் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கின் போது குறித்த பெண் பொலிஸ் அதிகாரி சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததாகவும் லஞ்ச ஊழல் அதிகாரிகள் குப்பை தொட்டியில் இருந்தே பணத்தை எடுத்தனர் என்றும் தான் சம்பவம் நடைப்பெற்ற இடத்தில் இருந்ததாகவும் மன்றில் தெரிவித்திருந்தார் குறித்த பெண் பொலிஸ் சார்ஜன்ட.
சம்பவம் நடைப்பெற்ற பின் பிரதிவாதியுடன் எவ்வித தொடர்பும் இருக்கவில்லை என கூறிய போதும் பெண் பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைப்பேசியில் 31 தடவை அழைப்பு ஏற்படுத்தியுள்ளதோடு குறுந்தகவல்களும் அனுப்பியுள்ளார் என்பதை வழக்கு தொடுநர் மன்றில் நிரூபித்தனர்.
அதை தொடர்ந்து பொய் சாட்சி கூறிய குற்றத்திற்காக கடூழிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது.