போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மிக சிறந்த அதிகாரியாக அறியப்படுபவர் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ. இவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகளுடன் தொடர்பு பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் நீண்ட காலம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்க மறியலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அவர் மீண்டும் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்த வேறோர் பிரிவிற்கு இடமாற்றுவதற்கு பொலிஸ் மா அதிபர் மேற்கொண்ட முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதடுத்து நிறுத்தியுள்ளார்.
இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவவின் சேவை போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு தேவையானது என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டதாக அறியக்கிடைக்கின்றது.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக காணப்படும் இன்ஸ்பெக்டர் நியோமல் ரங்கஜீவ, போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றை சுற்றி வளைத்தபோது அந்த வியாபாரிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்து குணமடைந்தவராகும். இதன் பின்னர் இவருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த பிரிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டால் அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அஞ்சமும் நிலவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.