![](http://3.bp.blogspot.com/-heoZ2xm-PJE/XBz5hWzGh-I/AAAAAAAAt3Y/0jCcbHq6pYQlgPfL6zrDJT3yaLbVtCmKwCLcBGAs/s200/48413412_522780578220897_2047546141343481856_n.jpg)
ம.வி. மு தலைவர் அனுர திசாநாயக்க அவர்கள் இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் ஆகிய காரணங்களுக்கு மறைந்துக்கொண்டு நான்கு மாதத்திற்கான நிதி ஒதுக்கிடு செய்யப்பட்ட போதிலும்அதற்குப் புறம்பாக பெரும் தொகையான பணம் இதனுடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
விசேடமாக ஜனாதிபதிக்காக 5565 மில்லியன் ரூபாய் பெரும்தொகை ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கோ, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கோ இதன் மூலமாக எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தமது கட்சி இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐதேக அரசாங்கத்தினால் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்ப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர அவர்கள் உத்தியோகப்பூர்வமாக அதரவு தெரிப்பதாக தெரிவித்தார். ஆனால் வாக்கெடுப்பு நடைபெறும்போது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சபையிலிருந்து வெளியேறியிருந்தது.
எதிர்வரும் 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை இன்று (21) மாலை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மூலம் 2019ஆம் ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்காக அரச செலவாக 1765 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் அதில் 970 பில்லியன் ரூபாய் கடன் சேவைக்காக(வட்டியும் தவணையும்) செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க 2019 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான செலவில் 55% கடன் மற்றும் வட்டியும் தவணையையும் செலுத்துவதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையின் மூலமாக மீண்டெழும் செலவாக 480 பில்லியனும் மூலதன செலவுக்காக 310 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.