வன்னியில் சீரற்ற காலநிலைகாரணமாக நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு தென்பகுதியிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்துச் செல்கின்றனர். அந்த வரிசையில் உலக இலங்கையர் பேரவையினர் 100000 ரூபாவினை முதற்கட்ட அவசர நிதியாக வழங்கி தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவ்வமைப்பானது இலங்கையில் இனங்களிடையேயான நல்லிணத்தினூடாகவே நிலையானதோர் சமாதானத்தை அடையமுடியும் என நம்புகின்றது. அதற்கான பெரு முயற்சியையும் அவ்வமைப்பு எடுத்து வரும் அதேநேரத்தில் ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மிகத் தீவிரமாகஎதிர்த்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த அமைப்பினர் இவ்வுதவியை மனுசத் தெரணவூடாக மேற்கொண்டுள்ளனர். இன்று காலை மனுசத் தெரண குழுவினர் சேகரித்த பொருட்களுடன் வடக்கு நோக்கி பயணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது