![](http://2.bp.blogspot.com/-26mH3svqD8Y/XCTzFOcSGAI/AAAAAAAAuFY/KhAobITT9LoMrGOTeinZe0xF9Bzc-3xswCLcBGAs/s200/Mass-grave%2Bin%2Bmanar.jpg)
அங்கு நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அகழ்வுப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் விடுமுறை காரணமாக இந்தப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளன.
இதேவேளை, மனித புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள், காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதமளவில்அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 283 மனித எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், அவற்றுள் 274 எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மனித எச்சங்களில் 21 எச்சங்கள், சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.