![](http://3.bp.blogspot.com/-cbFQ02_4Edc/XCoM7ObfchI/AAAAAAAAALE/KWcK-dq9_IMmh1QbUPNOrHDaGMEjoPwKwCLcBGAs/s200/ravi.jpg)
மத்திய வங்கியிலுள்ள இந்த சக்திகள், ரூபாவை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டு, பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தர முயற்சித்துவருவதாக, அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் உருவாகும் போது ரூபாவின் பெறுமதி, வீழ்ச்சியடைகிறது. மஹிந்த ராஜபக்ச குறுகிய காலத்தில் பிரதமராக செயல்பட்ட நேரம் திடீரென ரூபாவின் பெறுமதி அதிகரித்து, மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னர் இருந்தவாறே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது.
இந்த மாற்றம், மத்திய வங்கியிலுள்ள சிலரின் சூழ்ச்சியே என அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அந்த சூழ்ச்சிக்காரர்களை உடன் இனங் கண்டு, அவர்களை பதவி விலக்காவிடின்,, நாட்டிற்கு மிகப்பெரும் ஆபத்து வந்துவிடும் என அவர் எச்சரித்தார்.