.jpg)
12 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு செல்லும் உயர் அதிகாரிகள் சவூதிக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் ஆண், பெண் இருசாராரினதும் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உறுதி மருத்துவம் போன்ற ஆறு வகையான உடன் படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளதாக பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
சவூதி வேலைவாய்ப்புகளுக்காக மனித வளத்தை அனுப்பும் இந்தியா, இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா, வியட்னாம், கம்போடியா, பிலிப்பைன் போன்ற நாடுகளுடனும் சவூதி அரசு இவ்வாறான ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.