இது சம்பந்தமாக கல்முனை பொலிசார் தகவல் தருகையில் கடந்த 2013.12.16 ஆந் திகதி கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வைத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த EP-LH-8525 இலக்க டிப்பர் ரக கனரக வாகனம் களவு போயுள்ளதாக அதன் உரிமையாளர் முகம்மது இஸ்மாயில் அப்துல் ரஹீம் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
குறித்த களவு சம்பந்தமாக கல்முனை பொலிஸ் தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பார் தலைமையில் பெருங்குற்ற தடுப்பு பொலிஸ் அதிகாரிகள் நடாத்திய விசாரணையின் பலனாக குறித்த வாகனம் LH-8034 போலி இலக்கத்துடன் ஞாயிற்றுகிழமை 05.01.2014 வாகனமும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றி ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.
போலி இக்கத்துக்குரிய வாகனமும் விரைவில் பொலிசாரினால் கைப்பற்றப்படும் என பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த இலக்கதடுமாற்றம் மிகவும் தொழில்நுட்பத்துடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார் வாகன சாரதி படுத்தப்பட்டு 14 நாட்களில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்