Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

நீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா?

$
0
0
2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2இன் அதிபதி சந்திரன். இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூ ரம் சென்ற பின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார் க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள்.அன்பு, அட க்கம், பணிவு, பொறுமை,சகிப்புத்தன்மைஎன்பவற்றின் பிரதிநி தியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும்அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால்,ஆமாம் அது உண்மைதான் என்ப தோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;.கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர்.

கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர். இரவு எவ்வளவு நேர மானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறை நம் பிக்கை மிகஅதிகம். கண்கள் காந்த சக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககன மார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள்.

ஒரு புள்ளி கிடைத்தால் போதும்.ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்த ர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காண லாம். பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக் கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன் னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர்.

இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைக ளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.

அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப் படியாக வந்து சேரும். இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர் களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை:

நன்மை தரும் எழுத்துக்கள் : R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W

நன்மை தரும் எண்கள் : 2,7,1,6

நன்மை தரும் தேதி : 27,11,16,20,25,29

நன்மை தரும் நிறம் : வெள்ளை, சந்தனம்

நன்மை தரும் ரத்தினம் : முத்து

நன்மை தரும் ஹோரை : சந்திரன், குரு, சுக்கிரன்

நன்மை தரும் திசை : வடகிழக்கு

நன்மை தரும் தொழில் : நீர், விவசாயம்,வானியல், எழுதுகருவி, பண்ணை

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

மகாத்மா காந்தி : 02.10.1969

தாமஸ் ஆல்வா எடிசன் : 11.02.1847

டைரக்டர் சத்யஜித்ரே : 02.05.1921

ராஜிவ் காந்தி : 20.08.1994

லால்பகதூர் சாஸ்திரி : 02.10.1904

மகாகவி பாரதியார் : 11.09.1882

காஞ்சிப் பெரியவர் : 20.05.1894

பாடகி கே.பி சுந்தரம்பாள் : 11.10.1908

நாளை மூன்றாம் எண்காரர் பற்றி பார்ப்போம் !!!!


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>