
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா, அமைச்சின் செயலாளர் நிஷங்க விஜயரத்ன மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேனாதிலங்கார ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடு வதற்காக இம்மாதம் 12ம் திகதி சவுதி அரேபியா செல்லவுள்ளனர்.
வீட்டுப் பணியாளர்களாக செல்லும் ஆண், பெண் இரு சாராரதும் பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு உறுதி, மருத்துவ வசதி உட்பட 6 வகையான ஒப்பந்தங்கள் கைச் சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை சவுதி அரேபியாவுடன் இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.