![]()
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தைச் சேர்ந்த ஜயநாதன் தர்மலிங்கம் என்ற நபர் சர்வதேச பொலிஸாரால் பிரான்ஸில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சர்வ தேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற குறித்த நபர் இலங்கை கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவராவார்.
பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த நபர் பிரான்ஸின் பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு சட்டவிரோத வேலை வாய்ப்பு தொடர்பான விடயத்தில் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.