ஓட்டப்போட்டியில் முயலை ஆமை தோற்கடித்த கதையை அனைவரும் சிறுவயது முதலே தெரியும் ஆனால் தற்போது சீனாவில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியொன்றில் முயலொன்றை ஆமை பெரும்பாலான பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தோற்கடித்ததன் மூலம் சிறுவயதில் அறிந்த கதையை நியமாக்கியுள்ளது.
சீனாவின் வட பிராந்தியத்திலுள்ள ஹெனான் மாகாணத்தில் அண்மையில் பிராணிகளுக்கிடையிலான பனிச்சறுக்குப் போட்டிகள் நடைபெற்றதுடன் இதில் ஆமைக்கும் முயலுக்கும் இடையிலான போட்டி, நாய்க்கும் பூனைக்கும் இடையிலான போட்டி, சேவலுக்கும் வாத்துக்கும் இடையிலான போட்டிகள் என பல போட்டிகள் நடைபெற்றது.
சுமார் 40 மனிதர்கள் தமது வளர்ப்புப் பிராணிகளை போட்டியில் ஈடுபடுத்தியதுடன் பிராணிகளை அவற்றின் உரிமையாளர்களே பனிச்சறுக்கலின்போது பிடித்துக்கொண்டு செல்லவும் வழிகாட்டவும் அனுமதி வழங்கப்பட்டது.
இங்கு நடைபெற்ற அமையுடனான போட்டியில் எஜமானாரின் கட்டளைகளை முயல் பின்பற்றாததால் ஆமை வெற்றி பெற்றதாக சீன செய்திச் சேவை தெரிவித்துள்ளது.