
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.டி.ஜி. விஜேசிறிக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் , நீர்கொழும்பு பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஆர்.டி.ஜி சிறில் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் செயற்பட்ட பொலிஸ் குழுவினர் நீர்கொழும்பு , தளுபத்தை, பல்லன்சேனை வீதியில், இன்டர்சீட் வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து தியாக மூர்த்தி நிதர்சன் (25 வயது), முருகேசுப்பிள்ளை வசீகரன் (22 வயது), ஆகியோர் கைது செய்துள்ளதுடன் போலி நாணயத்தாள்களும் அவற்றை அச்சிட பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
கைது செய்ப்பட்டுள்ள சந்தே நபர்கள் இருவரும் இதற்கு முன்னரும் குற்றச் செயல்களின் பேரில் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டவர்கள் எனவும், விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதுடன் சந்தே நபர்கள் இருவரும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தே நபர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.