மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜெனீவா அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் உள்ளக முரண்பாடுகளின் பின்னர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்பதுடன் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனை விட சீனா இலங்கையின் நேச நாடு எனவும் என்றென்றும் சீனா இலங்கையுடன் நட்புடன் திகழும் என்பதுடன் தற்போது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ தெரிவித்துள்ளார்.