ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலங்கை பிரஜையான 19 வயதான ரவீந்திரன் கிருஷ்ண பிள்ளை என்பவருக்கு திட்டமிட்டு கொலை செய்த காரணத்திற்காக நேற்று (21.01.2014) துப்பாக்கிச் சூட்டின் மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நஸ்ட ஈடாக பணம் செலுத்தஅதிகாரிகள் முயற்சித்தபோதும் அக்குடும்பத்தினர் பணத்தை வாங்காது மரண தண்டனையை வலியுறுத்தி வந்த நிலையிலேயே நேற்று இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.