2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் படையினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக இலங்கை படைத்தலைமையகம் குற்றம் சுமத்தியுள்ளது.
2009 ஆண்டுக்கு பின்னர் தனியார் கட்டிடங்கள் மற்றும் பலாலியில உள்ள கட்டிடங்கள் என 8420 கட்டிடங்களில் இருந்து படையினர் வெளியேறியுள்ளனர் என்பதுடன் யாழ்ப்பாணத்திற்கு புதிய இராணுவ கட்டளைத்தளபதி பதவியேற்ற இடுத்த வாரத்திலேயே சுமார் 200 சிறிய படைமுகாம்கள் மூப்பட்டுள்ளதுடன் படையினர் பிரதான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் படையினரின் கண்காணிப்புகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக இலங்கையின் படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.