மன்னார் திருக்கேதீஷ்வரம் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளவை எல்லாம் இலங்கை இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களின் சரீரங்களே என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடுகின்றது.
அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தமிழ் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போது, வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தற்போதும் அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், தற்போதுள்ள தமிழ் மக்களும் இல்லாதொழியும் நிலையுமே ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மன்னாரை அதிகூடிய காலம் இராணுவத்தினரே நிருவகித்து வந்துள்ளனர். இவ்வாறு மனிதப் படுகொலைகளை வேறு யாராலும் செய்யவியலாது எனக் குறிப்பிட்டுள்ள பா.உறுப்பினர், ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாடு நடைபெறவுள்ள இக்கால கட்டத்தில் அரசாங்கம் மௌனியாக இருப்பதற்குக் காரணம் வடக்கில் மனிதப் படுகொலைகள் பற்றி தீர்ப்பு வழங்கப்படாதிருப்பதற்கே ஆகும் எனவும் குறிப்பிட்டார்.
தமது கட்சி தொடர்பில் அரசாங்கம் சந்தேகிப்பதாகவும், இப்படுகொலைகள் தொடர்பில் இராணுவத்தினரைச் சந்தேகிக்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)