வடக்கு – கிழக்கில் யுத்தம் காரணமாக உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆலோசனை வழிகாட்டல் சிகிச்சைகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த வழிகாட்டல் சிகிச்சை முறையில் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் என அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு கிழக்கு மாவட்டச் செயலக அடிப்படையில் சமூக நல மையங்கள் உருவாக்கப்பட்டு இதன் மூலம் நாள் தோறும் பத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் உளவியல் ரீதியில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தீர்வு காணுவது தொடர்பில் தெளிவான திட்டங்கள் வகுக்கப்படவில்லை எனவும் எனவே விரைவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் இணைத்து இவர்களுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இமெல்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.