கொழும்பு றோயல் கல்லூரியின் 1956 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் இலங்கை கடற்படையின் உதவியுடன் யாழ்.நெடுந்தீவு மகாவி்தியாலயத்தியலைய மைதானத்தில் அமைக்கப்பட்ட விருந்தினர் மண்டபத்தை இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவு பணிப்பானர் நாயகம் ரியல் அட்மிரல் ரவீந்திர விஜய குணவர்த்தன மற்றும் யாழ் மாவட்ட கட்டளை தளபதி உதயப் பெரேரா இணைந்து திறந்து வைத்தனர்.
கல்லூரி அதிபர் திருமதி சா.கிருஷ்ணதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர் மண்டப திறப்பு விழாவை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நடைபெற்றது.
மேலும் குறித்த இந்த மண்டபமானது கிட்டத்தட்ட 1,000,000 ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பாடசாலையின் அதிபர் திருமதி சா.கிருஷ்ணதாஸ் தென்பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் பழைய மாணவர்கள் அதுவும் 1956 ஆண்டு மாணவர்கள் வடக்கில் அதுவும் யாழ்ப்பாண குடாநாட்டின் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தை தெரிவு செய்து இப்படியான ஒரு விருந்தினர் மண்டபத்தை கட்டித்தந்தமை என்பது இன ஒற்றுமைக்கான ஒரு அடியாகும் எனக் குறிப்பிட்டார்.
அது மட்டுமல்லாது கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்களால் கடந்த இரண்டு வருடங்களாக வறுமை மற்றும் தாய் தந்தை அற்ற கல்வியில் சிறந்த பெறுபேற்றை கொண்ட 5 மாணவர்களுடைய கல்விக்கும் உதவி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இன்றை இந்த நிகழ்வுக்கு கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்களான வில்சன்,சில்வா மற்றும் வடமாகாண கட்டளை அதிகாரி, நெடுந்தீவு கடற்படை கட்டளைத்தளபதி பங்குத்தந்தை வைத்திய அதிகாரி மற்றும் இராணும் பொலிஸ் மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.