![]()
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ – லுனு வில – பண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த தும்புத் தொழிலாளியின் மகளே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது மகளை அவரது
காதலன் கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். பின் தனது மகள் வீடு திரும்பி விட் டதாக பொலிஸாருக்கு அறிவித்தார்.
சிறுமியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் விசாரணை நடத்தி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சிறுமி வல்லுறவுக்கு உட்படுத் தப்பட்டுள்ளமை பரிசோதனையில் உறுதியானது. அதன் பின் மீண்டும் சிறுமியை அழைத்து விசாரணை செய்த போது, தன்னை அயல் வீட்டில் உள்ளவரே வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் 72 வயதுடைய முதியவரை கைது செய்து மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.