போர்க்குற்ற விசாரணைகள் நியாயமான விசாரணையாக அமைய வேண்டுமாக இருந்தால் 1980 களில் எவ்வாறு இலங்கையில் பயங்கரவாதம் உருவானது என்பதிலிருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தபோது எவ்வாறான போர்க்குற்றங்கள் நடந்துள்ளது என்பது வரை சர்வதேசம் விசாரிக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.
கனடிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை-இந்தியஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என 1987 முதல் 1990 வரை அவர்கள் மீது போர் தொடுத்திருந்த இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் தொடர்பாகவும் அந்த மக்கள் அனுபவித்த துயரங்கள் தொடர்பாகவும் முறிந்த பனை (Broken Palmyrah) மற்றும் சாத்தானின் படை (The Satanic Force) எனும் இரு தமிழ் புத்தகங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.