Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

தற்கொலை செய்யவில்லை ஹிட்லர்... 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்!

$
0
0
2ம் உலகப் போரின் இறுதியில் 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பது தான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.

ஆனால் ஹிட்லர் சாகவில்லை. தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில் தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர்.

ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூடுதல் பரபரப்பையும் அவர் கிளப்பி விட்டுள்ளார்.

அதை விட முக்கியமானது. அவர் பெர்லினை விட்டுத் தப்பிச் சென்ற பின்னர் ஒரு கருப்பர் இனப் பெண்ணுடன் காதல் கொண்டு அவருடன் சில காலம் வாழ்ந்தார் என்பது தான்.

சிமோனி ரெனீ குரேரியோ என்ற முதுகலை மாணவி தான் Hitler in Brazil - His Life and His Death என்ற நூலில் இந்த தகவல்களை எழுதியுள்ளார். இந்த மாணவி பிரேசிலைச் சேர்ந்தவர்.

சரித்திரத்தில் மறக்க முடியாத சர்வாதிகாரி ஹிட்லர். அவரது பயங்கர முகத்தை அனைவரும் பார்த்துள்ளனர். அதேசமயம் அவருக்குள் இருந்த பல சுவாரஸ்யங்களையும் உலகம் படித்தறிந்துள்ளது.

ஹிட்லரின் சகாப்தம் பெர்லின் பதுங்கு குழியோடு முடியவில்லை என்பது தான் தற்போது லேட்டஸ்டாக வெளியாகியுள்ள பரபரப்பு. மாறாக அவர் பெர்லினை விட்டு தப்பி ஓடி, 1984ம் ஆண்டு வரை உயிர் வாழ்ந்தார் என்று இந்த புதிய புத்தகம் தெரிவிக்கிறது.

2ம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்ததை அறிந்த ஹிட்லர் உடனடியாக தப்பி ஓடி விட்டாராம். ஜெர்மனியை விட்டு வெளியேறிய அவர் பல நாடுகளுக்கும் மாறு வேடத்தில் போயுள்ளார்.

ஆர்ஜென்டினா போயுள்ளார், பராகுவே போயுள்ளார். கடைசியாக பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.

அவரது இந்த தென் அமெரிக்க நாடுகளின் பயணத்திற்கு இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாடுகளில் ஹிட்லர் மற்றும் அவரது கூட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல அரிய பொக்கிஷங்களை மறைத்து வைத்துள்ளனர். அதைத் தேடித் தான் ஹிட்லர் போனதாக சொல்கிறார்கள்.

பிரேசில், பொலிவியா நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் பிரேசிலுக்குட்பட்ட மாடோ கிராஸ்ஸோ என்ற மாகாணத்தில் தான் தலைமறைவாக 1984ம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார் ஹிட்லர்.

தனது 95வது வயதில் இயற்கையான முறையில் மரணத்தைச் சந்தித்துள்ளார் ஹிட்லர் என்கிறது இந்த நூல்.

இந்த நாடோடிப் பயணத்தின் போது அவருக்கும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த குட்டிங்கா என்ற பெண்ணுக்கும் இடையே நட்பும், காதலும், உறவும் ஏற்பட்டதாம்.

பிரேசிலுக்குத் தப்பி வந்த ஹிட்லர் தனது பெயரை அடோல்ப் லிப்ஸிக் என்று மாற்றிக் கொண்டு வாழ்ந்ததாக ரெனீ கூறுகிறார். அவர் வாழ்ந்த நகரத்தின் பெயர் நோஸா சன்ஹோரா.

ஹிட்லரை அங்குள்ளவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த தாத்தா என்று அழைத்து வந்துள்ளனராம்.

தற்போது அடோல்ப் லிப்ஸிக்கின் மிச்சத்தைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்த சிமோனிக்கு அரசு அனுமதி கிடைத்துள்ளதாம். இதையடுத்து இஸ்ரேலில் வசித்து வரும் ஹிட்லரின் உறவுக்காரர் ஒருவரின் டிஎன்ஏவுடன், லிப்ஸிக்கின் டிஎன்ஏவைப் பரிசோதிக்கவுள்ளாராம்.

ஹிட்லர் தனது பெயரை லிப்ஸிக் மாற்றியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார் சிமோனி. அதாவது ஹிட்லருக்கு மிகப் பிடித்த இசை மேதை பாக். அவர் பிறந்த ஊர்தான் லிப்ஸிக். எனவே தான் அந்தப் பெயரை தனது மாறுவேடப் பெயராக மாற்றிக் கொண்டாராம் ஹிட்லர். தலையைச் சுத்தி வருதே சிமோனி சொல்வதைப் பார்த்தால்....!

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>