![](http://4.bp.blogspot.com/-_-gItn_QiXs/UvJpCytJNeI/AAAAAAAAW10/gthXG0y9I2o/s320/ranil+and+palitha.jpg)
இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூடியது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, மாகாண சபை வேட்பு மனு தொடர்பில், கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, ஐதேக பாராளுமன்ற குழு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வேட்பு மனு தொடர்பாக பாராளுமன்ற குழு கூட்டத்தில் பேச வேண்டாமென, ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் தெவரப்பெருமவிடம் கூறியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் தெவரப்பெரும, கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தகாத வார்த்தைகள் கொண்டு திட்டியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. மோதலை தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற குழுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, ரணில் விக்ரமசிங்க அவ்விடத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, பாலித தெவரப்பெரும கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது தாக்கதல் நடாத்த முற்பட்டதாக, பாராளுமன்ற குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு, ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பிய போது, திரு. தெவரப்பெரும மதுபாதையில் இருந்ததாக, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்ட துர்ப்பாக்கியமான, ஒழுக்க விரோத செயற்பாடு குறித்து, உடன் ஒழுக் காற்று விசாரணை நடாத்தி, பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைமைத்துவத்தை வற்புறுத்தி வருவதாக, கட்சியின் அந்தரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.