அமெரிக்காவின் பெண்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதி கெதரீன் ரஸல் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், வீசா மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சு அமெரிக்க ராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்படவில்லை என அறிவித்துள்ளது.
அது மட்டுமல்லாது கெதரீன் ரஸலுக்கு வீசா மறுப்பதற்கான எவ்வித தேவையும் தமக்கு கிடையாது என குறிப்பிட்டுள்ளதுடன் இவர் சந்திக்க வேண்டிய சிலரை சந்திக்க முடியாது இருப்பதன் காரணத்தினால்தான் அவரது பயணத் திகதி திருத்தி அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.