படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற நிலையில், அந்நாட்டு அரசாங்கத்தால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று(06.02.2014) வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 54 பேரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதுடன் இவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில், தனிப்பட்ட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.