சுகாதார மற்றும் பாவனையாளர் சட்டங்களை மீறி அதிக உஷ்ணத்துடன் லொறியில் சவர்க்காரத்தூளுடன் ஏற்றிச்சென்ற 35000 ரூபா பெறுமதியான மாஜரீனை அழிக்கும்படி களுத்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டதுடன் இப் பொருட்களை ஏற்றிச் சென்ற களுத்துறையைச்சேர்ந்த ஏதேனுக மற்றும் ரஞ்சித் பெரேரா ஆகிய இருவருக்கு 6000 ரூபாவை அபராதமாக செலுத்தும்படி உத்தரவிட்டார்.
களுத்துறை பிரதேச சுகாதார பரிசோதகர் ஆர்.ஏ.சிங்கபாகு தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது குறைந்த உஷ்ணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய இப்பொருட்கள் எனவும் ஆனால் இவர்கள் அதிக உஷ்ணத்துடன் இப்பொருட்களை லொறியில் ஏற்றி எடுத்துச்சென்ற குற்றத்துக்காகவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.