வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸை அவரது பதவியிலிருந்து விலக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு ராவண பலய அமைப்பு கோருகிறது.
இந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் எந்தவொரு கொள்கையும், சரியான திட்டங்களும் இல்லை என அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிடுகிறார்.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராகச் சாட்சியமளிப்பவர்கள், சூழ்ச்சியாளர்கள் இந்நாட்டில் இருப்பதற்காக அவர்களுக்கு இடமளிப்பது எவ்வாறோ என அரசிடம் வினாதொடுத்து நிற்கின்ற தேரர், சர்வதேசத்திலிருந்து எழுகின்ற அழுத்தங்களுக்கு ஆதரவாக எங்கள் நாட்டுத் தூதுவர்கள் சிலர் இருப்பது பெரும் தலையிடியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைக்குள் சிக்கிக்கொண்டுள்ள கால கட்டத்தில் அரசாங்கம் உடனடியாக ஜீஎல்லை பதவிவிலக்கி, புதியதொரு வெளிநாட்டமைச்சரை நியமிக்க வேண்டும் எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)