வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் உள்ளது. வடகிழக்கெங்கிலுமுள்ள பெரும்பாலான நகர மற்றும் கிராம சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிக்கொண்டாலும். சகல சபைகளிலும் இடம்பெறுவதுபோல் வல்வெட்டித்துறை நகர சபையிலும் தலைமையை கைப்பற்றுவதற்காக ஒரு குழு தொடர் இடர்பாடுகளை செய்து வருகின்றது.
மேற்படி ஒழுக்க சீர்கேட்டுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையினால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் பலர் கட்சி தாவியதும் கட்டாகாலித்தனமாக செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்து வருகின்ற உண்மை.
இந்நிலையில் வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத்திட்டத்தினை தோற்கடிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு குழு சதி முயற்சிகளை செய்தபோது , சபையின் தலைவர் ஆனந்தராசாவிற்கு ஆதரவான மக்கள் மேற்படி குழுவை வரவு செலவுத்திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றபோது உள்ளே நுழையவிடாமல் தடுத்தது வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றச் செய்திருந்தனர்.
மேற்படி மக்களின் செயற்பாட்டிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டபை;பின் ஒரு குழு நீதிமன்று செல்லத்தீர்மானித்துள்ளது. இந்நடவடிக்கை அச்சபையின் முன்னாள் உறுப்பினரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவருவதாக அறியக்கிடைக்கின்றது. இந்நடவடிக்கைகளுக்கு அக்கட்சியின் வக்கீல் சிறிகாந்தா சட்ட ஆலோசனை வழங்குவதாகவும் அறியமுடிகின்றது.
இது தொடர்பில் மேற்படி குழுவினர் சபைத்தலைவர் ஆனந்தராசாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிரதி இங்கே.
மக்களுக்கு சேவை செய்யவேண்டிய சபையை பிடித்து வைத்து பதவிகளுக்காக அதன் செயற்பாடுகளை முடக்கி முழு நேரத்தையும் பதவிச்சண்டைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செலவிட்டு வருகின்றபோதும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.