Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

இரண்டாவது முறையாக கள்ளத்திருமணம் செய்ய முயன்ற நபர் பொலிஸாரால் கைது – யாழில் சம்பவம்!

$
0
0
கிளிநொச்சி ஆனந்தபுரத்தினைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணபதிப்பிள்ளை உதயம் (35) என்ற நபர் திரும ணத்துக்கு தயாராக மணவறையில் அமர்ந்திருந்த வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் யாழ்ப்பாணம், தட்டாத்தெரு சந்தியில் நேற்று இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தொரியவருவதாவது ஒரு பிள்ளை யின் தந்தையான குறித்த நபர் தட்டாத்தெரு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை ஏமாற்றி இரண்டாவது திருமணத்துக்கு தயாரான போதே அங்கு விரைந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் நண்பர்களால் பொலிஸுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஏற்கனவே திருமணப் பதிவு மேற்கொள்ளாத நிலையில் கிளிநொச்சியிலுள்ள பெண்ணொருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பிள் ளையொன்றும் உள்ளது. இந்நிலையில் தட்டாதெருவில் வசிக்கும் பெண்ணொரு வரிடம் ஐந்து இலட்சம் ரூபா சீதனம் பெற்றுக்கொண்டு அப்பெண்ணை திருமணம் செய்ய முற்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து திருமண வீட்டுக்குச் சென்ற பொலிஸார், மணக் கோலத்திலிருந்த மணமகனை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது பொலிஸாரின் மனிதாபிமான நடவடிக்கையாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இங்கு சட்டம் ஒழுங்கு மீறப்பட்டுள்ளதை அவதானி்க்க முடிகின்றது. இவர் முன்னர் திருமணம் செய்து கொள்ளாதவராயின் அவருக்கு திருமணம் செய்துகொள்வதை சட்டம் தடுக்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>