ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கப்படும் என சீனாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போது சீன வெளிவிவகார அமைச்சர் வேங் யீ தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் தேசிய சுதந்திரம், இறைமை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்கும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனைவிட இலங்கை மக்கள் தங்களது உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பவர்கள் என்பதனை சீனா நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சீனாவின் துணைப்பிரதமர் லீ யுவான்சோவை சந்தித்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என லீ தெரிவித்துள்ளார்.