![](http://1.bp.blogspot.com/-ASuVv70M3Jc/UwR_GuylK4I/AAAAAAAAA40/secIIKJmDBg/s320/sivan.jpg)
மகா சிவராத்திரி தினத்தன்று இந்து பக்தர்கள் இரவு விழித்திருந்து விரதம் அனுஷ்டிப்பது வழக்கமாகும். 27ம் திகதி மாலை 6 மணி முதல் 28ம் திகதி நண்பகல் வரை இவ்வாறு விரதம அனுஷ்டிக்கப்படுவதால் அதில் விரதத்தை அனுஷ்டிப் பதற்கும், வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் இந்து மாணவர்களுக்கு 28ம் திகதி விடுமுறை வழங்குவதற்கு அரச மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வேண்டுகோளொன்றை முன்வைத்திருந்தார். இவ் வேண்டு கோளை நிறைவேற்றும் வகையிலேயே கல்வி அமைச்சு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.