Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

சிவராத்திரி விரதமும் அதன் பலன்களும்!

$
0
0
பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், பாவங்கள், கர்ம வினைகள், மரண பயம், எம பயம் போன்றவை நீங்கிட விரதங்கள், வழிபாடுகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி மிக முக்கிய விரத நாளாகும். சிவனுக்குரிய ராத்திரிகள்,நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என பஞ்ச ராத்திரிகள் ஐந்து வகைப்படும்.

மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர் பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜை களுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேடம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள்.புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளன. சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. அந்த நாளே சிவராத்திரி என்பர்.

ஆலகால விஷ த்தை உண்ட சிவபெருமான் திருநீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்திரி எனக் கூறுவர். மார்க்கண்டேயன் உயிரைக் காக்க சிவன், எமனை காலால் உதைத்தார். அதன் பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள் வேண்டினர். அந்த நாளை சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினமும் சிவராத்திரி என கருதப்படுகிறது.

மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14ஆவது திதி யன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாக வழிபட ப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷி தினத்தை இந்தத் தினமாகக் கடைப்பிடிக்கிறோம். இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழி பட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14ஆவது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும்.

இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புரா ணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப் பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவி க்கப்பட்டுள்ளது. மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தி திதியில் அம்பிகை சிவபெரு மானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங் கினாள். இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே சிவராத்திரியை கொண்டாடுகிறார்கள். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனைப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கி யங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண் டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந் தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவ ராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனு க்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால், சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் உள்ளன. சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். சிவராத்திரி அன்று சிவபதம் அடைபவர்கள் மோட்சத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>