நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பற்றி முடிவெடுப்பது தங்கள் கட்சியே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
வத்தளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, பிரேமதாச, சந்திரிக்கா போன்றவர்களைப் போல மகிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதியா இல்லையா எனத் தீர்மானம் எடுப்பது தங்கள் கட்சியே எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திலுள்ள சில கட்சிகள் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து நீங்கிச் செல்ல வேண்டும் என்பதை வன்மையாக கண்டித்துள்ள ரவூப் ஹக்கீம், அது தொடர்பில் தான் கவலையுறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்றால், கிழக்கு மாகாண சபையும் படுதோல்வியைத் தழுவி, கீழே சாய்ந்துவிடும் என்பதை நினைவுறுத்தியுள்ள அவர், ஒருபோதும் தங்களது கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)