
இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இக் கண்காட்சியில் புலிகளின் சிறுவர் போராளிகள், புலிகளின் மிலேச்சத்தனமான அப்பாவி பொது மக்கள் மீதான தாக்குதல், அரசியல் வாதிகள், புத்திஜீவிகள் மீதான தாக்குதல்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டன.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள வவுனியா தெற்கு பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம், கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான சிவநாதன் கிசோர், கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.குமாரசாமி, சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜா மற்றும் மாணவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.
CRC நிறுவனத்தால் நடத்தப்படும் இக் கண்காட்சியை வடமாகாண ஆளுனர் மற்றும் வன்னி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.


