![](http://4.bp.blogspot.com/-jhHttuZgaM0/UyhanJZll0I/AAAAAAAAXEg/YlzxM2O3uNE/s320/missing+people.jpg)
பயங்கரவாத போர்க்காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைப்பதற்கும்,முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரிப்பதற்குமான காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 20,21, மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் சாட்சிகளை பதிவு செய்யவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்குமாறு முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதுவரை முறைப்பாடுகளை முன்வைத்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் ஆணைக்குழு முன் சாட்சிகளை வழங்க முடியும்.