![](http://3.bp.blogspot.com/-2-dckTgw7dw/Uyhd-DKd07I/AAAAAAAAXEw/F9uhAXmQdkI/s320/pragnant.jpg)
இவ்விருவரும் காதல் தொடர்பு கொண்டிருந்ததன் காரணத்தினால் அவர்களது காதலர்களினால் கர்ப்பிணியாக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மொரட்டுவை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறு வயது தாய்மார்களுக்கான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்துள்ளனர்.
இவ்வாறு சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்விரு சிறுமிகளும் தப்பி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறுமிகள் இருவரும் எதற்காக அங்கிருந்து தப்பி வந்தார்கள் என்ற சரியான காரணத்தைத் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார் இவ்விருவரும் மீண்டும் தமது காதலர்களுடன் செல்லும் நோக்கிலேயே தப்பி வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர்.
புத்தளம் கல்லடி மதுரகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியும், உடுகம மொரகஹயாய எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு சிறுமிகளையும் புத்தளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தார்.